தந்தையை இழந்த இந்து ஆண் ஒருவரும், முஸ்லிம் தாய் ஒருவரும் கண்ணீருடன் பிணவறையில் வெளியே அமர்ந்திருந்தனர்

மத மோதல்களில் கொல்லப்பட்ட சுமார் 10 முதல் 15 பேரின் உடல்கள் அங்கு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


இறந்தவர்களில் சிலரது உறவினர்களிடம் பேசியது பிபிசி தமிழ்.


வன்முறையில் தந்தையை இழந்த இந்து ஆண் ஒருவரும், முஸ்லிம் தாய் ஒருவரும் கண்ணீருடன் பிணவறையில் வெளியே அமர்ந்திருந்தனர்.


"நாங்கள் அவனை இத்தனை ஆண்டுகளாக வளர்த்தோம். அவர்களை என் மகனை கொன்று விட்டார்கள்," என்று தன் இறந்த மகனை நினைத்து அழுகிறார் வடகிழக்கு டெல்லியின் பழைய முஸ்தஃபாபாத் பகுதியைச் சேர்ந்த ஹஸ்ரா.


24 நான்கே வயதாகும் அவரது மகன் அஷ்ஃபக் ஹுசேனுக்கு காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதிதான் திருமணம் நடந்தது.